சென்னை கமிஷ்னருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!  இனியாவது திருந்துவாங்களா?

சென்னை கமிஷ்னருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!  இனியாவது திருந்துவாங்களா?

தமிழகத்தைப் பொருத்தவரையில் எப்போதுமே ஒரு பிரச்சனை எழுந்தால் தான் அவரவர்கள் தங்களது கடமைகளைச் செய்ய துவங்குகிறார்கள். பேனர் விஷயத்தில் சிவஸ்ரீ மரணத்திற்கு பிறகு ப்ளக்ஸ் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அஜாக்கரதையாக கொடிகம்பம் வைத்து இன்னொரு இளம்பெண்ணின் உயிரை பலிவாங்கப் பார்த்திருக்கிறார்கள்.

commissioner

பெரும்பாலான அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்வதேயில்லை.  இந்நிலையில் வந்தனா என்பவர், சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் பலகோடி ரூபாய் செலவில் அரசு அமைத்த நடைபாதைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை மாநகராட்சி கமிஷ்னருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள  பயன்படுத்தப்படாத வாகனங்களையும், நடைபாதை கடைகளையும் உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்படி மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.