சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் தனிமைப்படுத்துதல்.. மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

 

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் தனிமைப்படுத்துதல்.. மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூரமான வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்க படாததால், இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனா வைரஸ் அடுத்தவர்களை தொடும் மூலமாக நமக்கும் பரவும் என்பதால் முகமூடி மற்றும் சானிடைசர்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்குமாறும், அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

ttn

கொரோனா அதிகமாக பரவும் 4 ஆவது வாரத்தில் இந்தியா தற்போது இருப்பதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.  அதன் படி இந்தியா முழுவதிலும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் தமிழகத்தில் ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 3 மாவட்டங்களும் இருக்கின்றன. அதனால், அந்த 3 மாவட்டங்களை தனிமைப்படுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, 3 மாவட்டங்களை தனிமைப்படுத்துதல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.