சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் வேகமாக பரவுகிறது டெங்கு காய்ச்சல்! – அதிர்ச்சி தகவல்

 

சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் வேகமாக பரவுகிறது டெங்கு காய்ச்சல்! – அதிர்ச்சி தகவல்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னை மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக முன்கூட்டியே கணித்த மூன்று மாவட்ட ஆட்சியர்களும், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க விழிப்புணர்வு பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து பேசிய அதிகாரிகள், “வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைத்து, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு உருவாக ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் போதும் என்பதால், முறையாக மூடிவைக்காமல் பயன்படுத்தும் குடிநீரில்கூட எளிதாகக் கொசுகள் உருவாகிவிடுகின்றன. அதேபோல், சுற்றுப்புறங்களில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளைத் தவிர்த்து, தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். அந்த இடங்களில் மணலைக் கொண்டு நிரப்பி, நீர் தேங்காதவாறு சமப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களில் இருந்து தப்பிக்க, அரசை மட்டுமே நம்பி இருக்காமல், பொதுமக்களும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் தான் டெங்குவை தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.