சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: எவை இயங்கும்/ இயங்காது?

 

சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: எவை இயங்கும்/ இயங்காது?

இந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு தளர்வுகள் அந்தந்த மாநிலங்களை பொறுத்து மாறுபடும் என்று  அறிவிக்கபட்டது.  இதனையடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி தளர்வுகள் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. 

r

தமிழகத்தில் பொறுத்தவரையில் மேலும் 266பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  3023ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருகிறது. 

அவை கீழ்க்காணுமாறு :

rr

  • தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும். 
  • நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவித தளர்வுகளும் இல்லை. 
  • சென்னை மாநகராட்சியில் தொழிலாளர்கள் இருந்தால் கட்டுமான பணிகள் செய்யலாம். 
  • சென்னையில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்
  • ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், செல்போன் கடைகள் காலை 11 மணி முதல் தொடங்கி மாலை 5 மணி வரை இருக்கும். 
  • சென்னையில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
  • நகர்ப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி
  • சலூன்கள், அழகு நிலையங்களுக்கு அனுமதி மறுப்பு
  • சென்னையை தவிர, மற்ற மாவட்டங்களில்  50 சதவிகித பணியாளர்களை கொண்டு அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி 
  • ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை