சென்னை உள்பட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு : என்னென்ன செயல்படும்?

 

சென்னை உள்பட 5 மாநகராட்சிகளில்  முழு ஊரடங்கு : என்னென்ன செயல்படும்?

33 % பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள்,  ஏடிஎம்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கோவை, மதுரையில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்  என்று அறிவித்துள்ளார்.  இந்த நாட்களில் மருத்துவமனைகள்,  பரிசோதனை கூடங்கள் வழக்கம்போல் செயல்படலாம். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் வங்கிகளில்  33 % பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள்,  ஏடிஎம்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

tt

அதேபோல் பத்திர பதிவு அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் செயல்படாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா  பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. 

ttt

மேலும் முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் உணவுக்கு அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

tt

இந்நிலையில் 4 நாட்கள் அறிவிக்கபட்டுள்ள இந்த முழு ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே  காலை 6 மணிமுதல் மதியம் 1 வரை  அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதியளிக்கப்பட்டுள்ள சலுகை இருக்காது என்றும் இந்த முழு ஊரடங்கால் மாளிகை பொருட்கள் கடைகள் இருக்காது. அதனால் தான் தமிழக அரசு இரு நாட்களுக்கு முன்கூட்டியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும் தெரிகிறது.