சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!

 

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!

மேகாலயா நீதிமன்றத்தை வலுப்படுத்த தஹிலை நியமனம் செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

சென்னை: மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட கொலிஜியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தஹில் ரமணி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

justice

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக  விஜயா கமலேஷ் தஹில் ரமணி  பதவியேற்றார். இவர் முன்னதாக மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்.  இவரை உச்சநீதிமன்ற கொலிஜியம் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு எடுத்தது.இதற்கு கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மேகாலயா நீதிமன்றத்தை வலுப்படுத்த தஹிலை நியமனம் செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

mital

 இதன் காரணமாகச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மேகாலயா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. 

இந்நிலையில் தனது பணியிடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்திற்கு தஹில் ரமணி கடிதம் எழுதினார். ஆனால்  அதை கொலீஜியம் ஏற்க மறுத்த நிலையில்  நீதிபதி தஹில் ரமணி பதவி விலக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத்தலைவருக்கு அவர் அனுப்பியுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.