சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகிறார் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி

 

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகிறார் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரான புகழேந்தியை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்

சென்னை: தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரான புகழேந்தியை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த நீதிபதிகள் டீக்காராமன், சதீஷ்குமார், சேஷசாயி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக அண்மையில் பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 2016-ஆம் ஆண்டு  நவம்பர் 9-ம் தேதி முதல் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த அந்த மூவரையும் குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி, நிரந்தர நீதிபதிகளாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமணி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்ற கிளையில் பணியாற்றும் புகழேந்தியை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 ஆண்டுகளுக்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமணி அடுத்த வாரம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.