சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை உண்டா… இல்லையா? – தலைமை நீதிபதி 29ம் தேதி ஆலோசனை

 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை உண்டா… இல்லையா? – தலைமை நீதிபதி 29ம் தேதி ஆலோசனை

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடுவதா வேண்டாமா என்பது பற்றி வருகிற 29ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடுவதா வேண்டாமா என்பது பற்றி வருகிற 29ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன. முக்கிய வழக்குகள் மட்டும் காணொலி காட்சி வாயிலாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு நீடித்து வருகிறது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு உள்ளது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டு ஊரடங்குக்குப் பிறகு நீதிமன்றங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

lawyer-prabhakaran

ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிராக, நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் பிரபாகரன் வேண்டுகோள்விடுத்திருந்தார். கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கி, இயல்பு நிலை திரும்பும் வரை கீழ் நீதிமன்றங்களிலும் காணொலி காட்சி மூலமாகவே விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல் கோடை விடுமுறையை ரத்து செய்த சுற்றறிக்கையை திரும்பப்பெறவேண்டும் என்று லா அசோசியேஷன் தலைவர் செங்குட்டுவன் கூறியிருந்தார்.

chennai-high-court-56

இதைத் தொடர்ந்து நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிப்பதா அல்லது பணியைத் தொடர்வதா என்று சக நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளார். நீதிபதிகள் கூட்டத்திற்கான ஏற்பாட்டை செய்யும்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 29ம் தேதி சக நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தி அதன் பிறகு நீதிமன்ற விடுமுறை தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.