சென்னை அண்ணா சாலை மூடப்பட்டது! – சமூக பரவலைத் தடுக்க தமிழக அரசு அதிரடி

 

சென்னை அண்ணா சாலை மூடப்பட்டது! – சமூக பரவலைத் தடுக்க தமிழக அரசு அதிரடி

ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும் பொது மக்கள் வெளியே நடமாடுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கொரோனாவும் அறிகுறியின்றி பரவிவருவதால் சமூக பரவல் என்ற நிலை எப்போது வேண்டுமானாலும் அடையலாம் என்று எச்சரிக்கையை மருத்துவர்கள் விடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் சென்னையில் அண்ணாசாலையை மூடி தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும் பொது மக்கள் வெளியே நடமாடுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கொரோனாவும் அறிகுறியின்றி பரவிவருவதால் சமூக பரவல் என்ற நிலை எப்போது வேண்டுமானாலும் அடையலாம் என்று எச்சரிக்கையை மருத்துவர்கள் விடுத்துள்ளனர். இதனால், ஊரடங்கைக் கடுமையாக பின்பற்றுவது என்று தமிழக அரசு முடிவு செய்து சென்னை அண்ணா சாலையை முழுவதுமாக மூடியுள்ளது.

chennai-anna-salai-76

15 கி.மீ நீளம் கொண்ட சென்னை அண்ணாசாலையில் அண்ணா மேம்பாலம் முதல் திருவல்லிக்கேணி வரை முழுவதும் மூடப்பட்டுள்ளது. திடீரென்று முழுவதும் மூடப்பட்டுள்ளதால் வீடுகளை விட்டு வெளியே சென்ற மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அறிவிப்பு வெளியிட்டு மூடியிருந்தால் ஜாக்கிரதையாக வீடுகளிலேயே இருந்திருப்போம். இப்போது மாற்று வழிகள் மூலம் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அத்துமீறி இந்த சாலையில் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரக்கைவிடுத்துள்ளனர்.