சென்னையை கலங்கடிக்கும் டிப்டாப் ஆட்டோ திருடன்!

 

சென்னையை கலங்கடிக்கும் டிப்டாப் ஆட்டோ திருடன்!

நூதன முறையில் ஆட்டோவை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

நூதன முறையில் ஆட்டோவை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை புளியந்தோப்பு நாராயண தெருவைச் சேர்ந்தவர் ஜாவித் (30). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதியதாக ஆட்டோ வாங்கி அதனை தனியார் கால் டாக்ஸி நிறுவனம் மூலம் இணைத்து ஓட்டி வந்தார். நேற்றிரவு ஆட்டோவை ஆப் மூலம் புக் செய்த நபர் ஒருவர் கிண்டியில் ஏறியுள்ளார். 

சாலிகிராமம் வரை செல்ல வேண்டும் என்று கூறி சென்றுள்ளார். சாலிகிராமம் சென்றவுடன் அண்ணா தெரு செல்ல வேண்டும் என்று கூறியதையடுத்து அங்கு சென்று ஆட்டோவை ஜாவித் நிறுத்தினார். 

 

auto
இதையடுத்து அந்த டிப்டாப் ஆசாமி ஜாவித்திடம் “தான் ஒரு பிரபலமான துணை நடிகை ஒருவரை அழைத்து வரவேண்டும் நீ வந்தால் சரியாக இருக்காது ஆட்டோவை என்னிடம் கொடு நான் போய் அவரை அழைத்து வந்து விடுகிறேன். அதன் பிறகு நாம் அனைவரும் ஆட்டோவில் சென்று விடலாம்” என்று கூறி உள்ளார். 

மேலும் மாரி என்பவருக்கு போன் செய்து அவர் தன்னுடைய நண்பர் என்றும் அவர் இங்கு வருவார் அவருடன் பேசிக் கொண்டிருங்கள் என்று கூறியுள்ளார். தனக்கு பெரிய சவாரி சிக்கி கொண்டது மேலும் ஜாவித்துக்கு அவரது நண்பரும் வர உள்ளார் என்பதால் இதனை நம்பி ஜாவித் தனது புதிய ஆட்டோவை அந்த நபரிடம் கொடுத்து உள்ளார்.ஆட்டோவை எடுத்துச் சென்ற அந்த நபர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.

இதற்கிடையில் மாரி என்பவர் வேறு ஒரு ஆட்டோவை ஓட்டி வந்தார். அவருடன் ஜாவித் பேசிக் கொண்டிருந்தார். தனது ஆட்டோவை அந்த நபர் எடுத்துச் சென்றதாக ஜாவித் கூறியுள்ளார். அப்போது மாரி அளித்த பதில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த நபர் தனது ஆட்டோவில் இரண்டு முறை சவாரி செய்ததாகவும் தற்போது கூட சவாரிக்காக தனது ஆட்டோவை கொண்டு வரச் சொன்னதால் ஆட்டோவை இங்கு கொண்டு வந்ததாகவும் அவர் யார்? என்பது எனக்கு தெரியாது என அங்கிருந்து ஆட்டோவை எடுத்து கொண்டு மாரி சென்றுவிட்டார்.

அப்போதுதான் நூதன முறையில் தனது ஆட்டோவை டிப்டாப் ஆசாமி திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து விருகம்பாக்கம் போலீசில் ஜாவித் புகார் அளித்ததையடுத்து விருகம்பாக்கம் போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆட்டோவை நூதனமுறையில் திருடிச் சென்ற டிப்டாப் ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.