சென்னையில் 46 பகுதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களிலிருந்து விலக்கு!

 

சென்னையில் 46 பகுதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களிலிருந்து விலக்கு!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே31 ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே31 ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 74 பேர் உயிரிழந்த நிலையில்  3,538 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் 46 கொரோனா கட்டுப்பாடு பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்பு 28 நாட்களில் தொற்று ஏற்படாவிட்டால் மட்டுமே விடுவிக்கப்படும் எனும் நிலை இருந்தது. தற்போது அது 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து கடந்த 14 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று பதிவாகாத நிலையில் 46 பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இன்னும் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக 712 இடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 712 இடங்களிலும் தொடர்ந்து 14 நாட்களில் யாருக்கும் தொற்று இல்லை என்றால் அந்தப் பகுதி முழுமையாக விடுவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.