சென்னையில் 200 பேருந்துகள் இயக்கம் – மாநகரப் போக்குவரத்துக் கழகம்

 

சென்னையில் 200 பேருந்துகள் இயக்கம் – மாநகரப் போக்குவரத்துக் கழகம்

சென்னையில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் நடமாட்டமும் வாகனபோக்குவரத்தும் அதிகமாக காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் தவிர மற்ற 25 மாவட்டங்களிலும் மக்கள் மாவட்டத்துக்குள்ளேயே பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

ttn

சென்னையில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் நடமாட்டமும் வாகனபோக்குவரத்தும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அலுவலக வாகனங்களே அதிகமாக காணப்படுகின்றன. இந்நிலையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக சென்னையில் இன்று முதல் 200 பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்று சென்னை போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளில் தனிமனித இடைவெளி கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ttn