சென்னையில் வெள்ளம் வருமாடா? வரும்ணே, வந்தா பிரச்னை இருக்காதுண்ணே!

 

சென்னையில் வெள்ளம் வருமாடா? வரும்ணே, வந்தா பிரச்னை இருக்காதுண்ணே!

தாழ்வான பகுதி , சமநிலை பகுதி , மேடான பகுதி என தனித்தனியே பிரித்து, கனமழை பெய்தால் முதலில் எந்த பகுதியில் வெள்ளம் பாதிக்கும் என்பதை கண்டறியும் வகையில் டிஜிட்டல் வரைபடத்தை இந்திய சர்வே நிறுவனம் தயாரித்து வருகிறது.

வெள்ளத்தால் ஏற்படும் பெரும் பாதிப்புகளை தவிர்க்க, அமெரிக்காவில் இருப்பதை போன்ற நிகழ்நேர வெள்ள முன்கணிப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய  4837 சதுர கிமீ பகுதிகளுக்கான வெள்ள முன்கணிப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, கோவளம் , அடையாறு, கூவம் , கொசஸ்தலையாறு, ஆரணியாறு மற்றும் அவற்றை சுற்றியுள்ள நீர்வழிப்பாதைகள் மற்றும் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளைக் கொண்ட வரைபடம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

Flood ridden Chennai

தனித்தனியே பிரித்து, கனமழை பெய்தால் முதலில் எந்த பகுதியில் வெள்ளம் பாதிக்கும் என்பதை கண்டறியும் வகையில் டிஜிட்டல் வரைபடத்தை இந்திய சர்வே  நிறுவனம் தயாரித்து வருகிறது. சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அளவினை கணக்கிடும் வகையிலான கருவிகள் பொருத்தப்பட்டு எந்த பகுதிகளை வெள்ளம் பாதிக்கும், நீர்நிலைகள் கொள்ளளவை எட்டும் நேரம், அவ்வாறு ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறினால் எந்தப்பகுதிக்குள் முதலில் தண்ணீர் வெளியேறும் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கணிக்க முடியும்.

Flood forecasting system

இவ்வாறு, வெள்ள பாதிப்பை முன்கூட்டியே கணிக்க முடிவதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கையை துரிதமாக ஆரம்பிக்கமுடியும், உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்த உள்ள இத்திட்ட பணிகளை முடித்து செயல்பாட்டுக்கு வர மூன்று ஆண்டுகள் ஆகும். கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ள பாதிப்புகளை பார்க்கும் போது இந்த வெள்ள முன்கணிப்பு திட்டம் அவசர அவசியமானதுதானே!