சென்னையில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்: அதிர்ச்சியில் மக்கள்!?

 

சென்னையில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்: அதிர்ச்சியில் மக்கள்!?

கொசுக்கள் கடுமையான காய்ச்சலை ஏற்படுத்துவதோடு, பல சமயங்களில் உயிரையும் பறித்து விடுகிறது. 

டெங்குகாய்ச்சல் கொசுக்கள் மூலம்  பரவும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தேங்கிக் கிடக்கும்  நீரில் உருவாகும் இந்த கொசுக்கள் கடுமையான காய்ச்சலை ஏற்படுத்துவதோடு, பல சமயங்களில் உயிரையும் பறித்து விடுகிறது. 

 


 

இந்நிலையில் மழைக்காலம் முடிந்த பின்னரும் டெங்குகாய்ச்சல் சென்னையில்  மீண்டும் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்ட இடங்களில் கொட்டப்படும் குப்பைகள், சாக்கடை கால்வாய்  பகுதிகளில் கொசுக்களின் உற்பத்தி என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தற்போது காய்ச்சலால் மருத்துவமனைக்குச் சென்று வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக வியாசர்பாடி, பெரம்பூர், முகப்பேர் ஏரித்திட்டம், கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பல இடங்களில் கொசுக்களின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

 

இதனால் மூன்று நாட்கள் காய்ச்சலால் அவதிப்படுவோர், ரத்தப்பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் என்று மருத்துவமனைகளில் அறிவுறுத்தப்படுகிறது. அதேசமயம் கோடைக்காலம் வந்துவிட்டால் டெங்கு போன்ற காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.