சென்னையில் மழை வர இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் தெரியுமா?

 

சென்னையில் மழை வர இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் தெரியுமா?

கேரளாவில் ஜூன் 1ம் தேதியே பருவமழை தொடங்கி விடுவது வழக்கம். ஆனால், ஜூன் 8ம் தேதி தான் பருவமழை துவங்கியது

சென்னை: சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று  வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

rain

இந்தியாவின் தண்ணீர் தேவையைப் பருவமழை தான் தீர்த்து வருகிறது. வழக்கமாகத் தென்மேற்கு பருவ மழை  ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்த முறை ஆறுநாட்கள் தாமதமாகத் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்தது. வெயிலின் தாக்கத்தில் சிக்கி அவதிப்பட்டு  வந்த மக்கள், தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். அதற்கு மற்றொரு காரணம் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சமும்  தான். இருப்பினும்  வரும் 25ம் தேதிக்குள் தென்னிந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் கூறப்பட்டுள்ளது. 

pradeep

இந்நிலையில் இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறும் போது, ‘சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகின்ற நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படும்’ என்று கூறியுள்ளார்.

 

முன்னதாக சென்னையில் ஒருசில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதை வலைதளவாசிகள் பலரும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.