சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது- தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

 

சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது- தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

வரும் 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று மண்டலமாக பிரித்து தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் பச்சை மண்டலங்களில் அதிக தளர்வுகளும் சிவப்பு மண்டலங்களில் குறைவான தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஊரடங்கு அவ்வளவாக தளர்த்தப்பட வில்லை. கிட்டத்தட்ட 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் மதுக்கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டிருந்தன. எப்போது தான் கடை திறக்கப்பார்கள் என்று ஆவலுடன் காத்திருந்த குடிமகன்களுக்கு நேற்று தமிழக அரசு ஒரு இன்பமான செய்தியை அறிவித்தது. அதாவது வரும் 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ttn

இது குடிமகன்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சென்னையில் வசிப்பவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 7 ஆம் தேதி மது கடைகள் திறக்கப்படாது என்றும் மதுக்கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும்,சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குடிமகன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.