சென்னையில் பேருந்துகள் இயங்கவில்லை: திடீர் ஸ்டிரைக்கால் பொதுமக்கள் அவதி!

 

சென்னையில் பேருந்துகள் இயங்கவில்லை:  திடீர் ஸ்டிரைக்கால் பொதுமக்கள் அவதி!

வழக்கமாக ஊதியமானது ஊழியர்களின் வங்கிக்கணக்கில்   மாத இறுதிநாளில்  செலுத்தப்படுவது வழக்கம்.

சென்னை: சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்  பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

சென்னையில் மாநகரப் போக்குவரத்தை  நம்பி பல பேர்  இருக்கின்றனர். பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நாள்தோறும் ஏராளமான பயணிகள்  அரசு பேருந்தினால்  பயன்பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள்  இன்று காலை திடீரென எந்தவித முன் அறிவிப்புமின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

strike

வழக்கமாக ஊதியமானது ஊழியர்களின் வங்கிக்கணக்கில்   மாத இறுதிநாளில்  செலுத்தப்படுவது வழக்கம். ஆனால்  இன்றுவரை ஊதியம் போக்குவரத்துக்கு ஊழியர்களுக்குக் கிடைக்காததால் வேலைநிறுத்தத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த திடீர் ஸ்டிரைக்கால்   பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேரமின்மையால் சிலர் ஆட்டோக்களை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அம்பத்தூர், அண்ணாநகர், பூவிருந்தவல்லி,  வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் பேருந்தை இயக்காமல் ஊழியர்களின் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

இதையடுத்து , சென்னை மாநகரப் பேருந்து ஊழியர்களுக்கு இன்று இரவுக்குள்  ஊதியம் வழங்கப்படும் எனப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் ஊதியம் குறித்து வெளியாகும் வந்தந்திகளை  நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.