சென்னையில் பல்வேறு விதிமுறைகளுடன் 2500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி!

 

சென்னையில் பல்வேறு விதிமுறைகளுடன் 2500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி!

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,காவல்துறை விதித்த விரிவான கட்டுப்பாடுகளை பற்றி இந்த பதிவில் பார்போம்

சென்னை: விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,காவல்துறை விதித்த விரிவான கட்டுப்பாடுகளை பற்றி இந்த பதிவில் பார்போம். 

விநாயகர் சதுர்த்தி விழா இன்று  நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, இந்து இயக்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இதற்காக கடந்த பல வாரங்களாக விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து  சென்னையில் 2500 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது .

 

விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.அதன் அடிப்படையில் விநாயகர் சிலை வைக்கப்படும் இடம் பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். 

பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 5 அடி உயரத்தில் இருந்து 10 அடி உயரத்துக்குள் இருக்க வேண்டும், களி மண்ணால் செய்யப்பட்டவைகளாக இருக்க வேண்டும், வேதிப் பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை பிரதிஷ்டை செய்யக் கூடாது, அனுமதி பெற்ற இடத்திலேயே விநாயகர் சிலையை வைக்க வேண்டும், 

 

 

ஒலி பெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்,சிலைகளைப் பாதுகாக்க,விழாக் குழு சார்பில் சிலைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளை காவல் துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சவுண்ட் சர்வீஸ் பயன்படுத்த உரிமம் மற்றும் அனுமதிக்கான சான்று, தீ தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் எனவும் காவல்துறை அறிவிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

 

 

 

மேலும் பாதுகாப்பினை பலபடுத்துவதர்க்கும் விநாயகர் சிலைகள் பாதுகாப்பிற்கும் மற்றும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் ஊர்வலத்திற்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.