சென்னையில் நாளை குடியுரிமை பாதுகாப்பு மாநாடு… பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

 

சென்னையில் நாளை குடியுரிமை பாதுகாப்பு மாநாடு… பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், குடியுரிமை பாதுகாப்பை வலியுறுத்தியும் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடக்க உள்ளதாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை மக்கள்தொகை பதிவேடு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

சென்னையில் வருகிற 26ம் தேதி குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடக்கிறது. இதில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், குடியுரிமை பாதுகாப்பை வலியுறுத்தியும் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடக்க உள்ளதாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை மக்கள்தொகை பதிவேடு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தின் முகப்புரையில் கூறியதற்கு எதிராக சி.ஏ.ஏ உள்ளது.

caa-protest.jpg

இந்த சட்டத் திருத்தத்தில் இஸ்லாம் சேர்க்கப்படவில்லை. இலங்கை, பூட்டான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு குடியுரிமை இல்லை என கூறப்பட்டுள்ளதால் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள்.
பாகிஸ்தானில் உள்ள அகமதியாக்கள், பூட்டானில் உள்ள கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டுதான் இந்தியாவுக்கு வருகிறார்கள்.அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது.எனவே, இந்த திருத்தச் சட்டம் அடிப்படையிலேயே குறைபாடுள்ளது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோரின் பூர்வீகம், பிறந்த தேதி ஆவணங்கள் உட்பட புதிதாக சேர்க்கப்பட்ட 6 கேள்விகளை நீக்கும்வரை என்பிஆர் பணிகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இவைகளின் பாதிப்பறிந்து பாஜக கூட்டணிக் கட்சிகள்கூட தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, தமிழக அரசு தயக்கமின்றி எதிர்ப்பை பதிவு செய்ய முன்வர வேண்டும்.

chennai-caa.jpg

இதை வலியுறுத்தி நாளை (பிப்ரவரி 26) சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் குடியுரிமை பாதுகாப்பு நடைபெற உள்ளது. இதில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்து என்.ராம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்” என்றார்.