சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி திட்டம் தொடக்கம்!

 

சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி திட்டம் தொடக்கம்!

மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

கொரோனா வைரஸின் கோரம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஒரே வழி, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது தான். அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதால், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

ttn

அந்த வகையில், சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி 5,000 மூன்று சக்கர தள்ளுவண்டி, 2,000 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.