சென்னையில் தீவிரமடையும் கொரோனா… தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னையில் தீவிரமடையும் கொரோனா… தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால்  571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று ஒரேநாளில் 86  பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 500க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.  அதாவது சென்னையில் 95பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 58 பேருக்கும் திண்டுக்கல்லில் 45 பேருக்கும் திருநெல்வேலியில் 38 பேருக்கும், ஈரோட்டில்  32, நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா  25, தேனி மற்றும் கரூரில் தலா 23, செங்கல்பட்டு 22, மதுரை 19, திருச்சியில் 17, விழுப்புரத்தில் 15 பேருக்கும் கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

List

இதேபோல், திருவாரூர், சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 12 பேருக்கும் விருதுநகர், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தில் தலா 11 பேருக்கும் கடலூர் மற்றும் திருப்பத்தூரில் தலா 10 பேருக்கும் திருவண்ணாமலையில் 8, கன்னியாகுமரியில் 6 பேருக்கும், சிவகங்கை, வேலூர், தஞ்சாவூரில் தலா 5 பேருக்கும், காஞ்சிபுரம் மற்றும் நீலகிரியில் தலா 4 பேருக்கும் திருப்பூரில் 3 பேருக்கும் ராமநாதபுரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா இரண்டு பேருக்கும் பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 
பெரம்பலூரில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.