சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: நள்ளிரவில் மக்கள் தண்ணீர் திருடும் அவலநிலை!? வைரல் வீடியோ!

 

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: நள்ளிரவில் மக்கள் தண்ணீர் திருடும் அவலநிலை!? வைரல் வீடியோ!

குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தண்ணீர் திருடும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

சென்னை: குடிநீர் தட்டுப்பாடு காரணமாக இளைஞர்  ஒருவர்  தண்ணீர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கோடைக்காலம் என்பதால் சென்னையில்  கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஏரிகள், ஆறுகள் வற்றிக் காணப்படுவதாலும், இந்த வருட மழை பொய்த்துப் போய்  விட்டத்தாலும்  குடிநீர் இல்லாமல் மக்கள் திண்டாடிவருகின்றனர். ஆங்காங்கே குடிநீர் இல்லாமல் மக்கள் குடங்களுடன் தண்ணீர் கிடைக்கும் இடத்தை தேடி  செல்லும் அவலநிலையும் அரங்கேறியுள்ளது.

water

இதையடுத்து தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் 550 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யப்படுகிறது. வறட்சியின் காரணமாக, வரும் ஜூன் 1ம் தேதி முதல், 500 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகம் செய்யப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. 

water

இந்நிலையில், சென்னை சூளைமேடு அண்ணா நெடுஞ்சாலையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலின் முன்பு குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீர் கேன் திருடப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில் இளைஞர் ஒருவர் அங்குச் சேமிக்கப்பட்டுள்ள தண்ணீர் கேன்களில் இரண்டு கேன்களை தன்னுடைய ஆட்டோவில் திருடிச் செல்கிறார். 

 

 

தண்ணீர் பற்றாக்குறையால் சில இடங்களில் அடிதடி சண்டை ஏற்படுவதுடன், தண்ணீர் திருட்டும் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.