சென்னையில் செல்போன் திருட 6 மாதம் பயிற்சி ! பயிற்சிக்குப்பின் நாங்களே வேலை தருகிறோம் !

 

சென்னையில் செல்போன் திருட 6 மாதம் பயிற்சி ! பயிற்சிக்குப்பின் நாங்களே வேலை தருகிறோம் !

சென்னையில் செல்போன்களை எப்படி திருடுவது என பயிற்சி அளித்த கும்பல் பயிற்சிக்குபின் மாத ஊதியத்தை வேலையும் கொடுத்துள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் செல்போன்களை எப்படி திருடுவது என பயிற்சி அளித்த கும்பல் பயிற்சிக்குபின் மாத ஊதியத்தை வேலையும் கொடுத்துள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

நாள்தோறும் நாளிதழ்களை திறந்தாலே மெழுகுவர்த்தி தொழில் செய்ய பயிற்சி, மேக்கப் போடும் பயிற்சி, சமையல் பயிற்சி, தொழில் முனைவோர் பயிற்சி, நாள்தோறும் 2,000 ரூபாய் சம்பாதிக்கலம் என ஏதாவது ஒரு விளம்பரம் வரும். இந்த விளம்பரங்களால் பயன் அடைந்தவர்களை விட ஏமாந்தவர்கள்தான் அதிகம் என்பதை மறுப்பதிற்கில்லை.

இந்நிலையில் செல்போன் ரிப்பேர் பயிற்சி விளம்பரத்தை கூட பார்த்து விட்டோம். வராது ஒன்று செல்போன் திருடும் பயிற்சி. நாளடைவில் அது தினசரி நாளிதழில் வந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

cellphone

சென்னையில் ஒரு கும்பல் செல்போனை திருடுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

யானைக்கவுனி பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டிருந்த ஒருவரை போலீஸ் பின்தொடர்ந்தபோது சோழவரத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒருவரிடம் அவர் வைத்திருந்த செல்போனை கொடுத்தார். பின்னர் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் ரவி என்பதும் அவர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று சோழவரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியபடி செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்தது.

 

ஆந்திராவில் இருந்து இளைஞர்களை அழைத்து வந்து செல்போன் திருடுவது எப்படி என 6 மாத பயிற்சி வகுப்பை அளித்துள்ளது. மக்கள் கூடும் இடங்களில் நாளிதழ்களை வாசித்து கொண்டே சென்று இந்த கும்பல் செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. செல்போன் திருடிவரும் இவர்களுக்கு மாத சம்பளமும் கொடுத்துள்ளார் ரவி. மேலும் திருடப்படும் போன்கள் ஆந்திராவுக்கு கொண்டுசென்று விற்றுவிடுவது வழக்கம். இதையடுத்து அந்த செல்போன் திருட்டு கும்பலின் தலைவன் ரவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.