சென்னையில் சிக்னல் கோளாறால் நேர இருந்த பெரும் விபத்தை தவிர்த்த ஓட்டுநர்: நடந்தது என்ன?

 

சென்னையில் சிக்னல் கோளாறால் நேர இருந்த பெரும் விபத்தை தவிர்த்த ஓட்டுநர்: நடந்தது என்ன?

சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்குப் புறப்பட்ட ரயில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளது.

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்குப் புறப்பட்ட ரயில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து கடந்த புதன் இரவு 8.20மணிக்கு மங்களூர் மெயில் புறப்பட்டுள்ளது. அந்த ரயில், சென்னை பேசின்பிரிட்ஜ் நிலையத்துக்கு முன் வந்தபோது, ரயில் செல்ல வேண்டிய திசை வலப்புறமாகக் காட்டியபடி கிரீன் சிக்னல் எரிந்துள்ளது.

ஏதோ கோளாறாக இருப்பதை உணர்ந்த ரயில் ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு பேசின்பிரிட்ஜ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சிக்னலில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, 8.45 மணிக்கு அங்கிருந்து மங்களூர் மெயில் ரயில் புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஒருவேளை, ரயில் தடம்மாறி சென்றிருந்தால் பெரும் விபத்து நேர்ந்திருக்கும். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால், நடைபெற இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கவனக்குறைவு குறித்து ரயில்வேயின் சிக்னல் தொலைத்தொடர்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.