சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 767 ஆக உயர்வு.. மண்டலவாரி பட்டியல் உள்ளே!

 

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  767 ஆக உயர்வு.. மண்டலவாரி பட்டியல் உள்ளே!

அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வருமாறும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 33,050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,074 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2100 ஐ எட்டியுள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அதனால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் அப்பகுதிக்கு செல்லாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் அவரவர் வீட்டிலேயே இருக்குமாறும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வருமாறும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
 

ttn

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண்டலவாரியான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு,திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று மட்டும் சென்னையில் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 767 ஆக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.