சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை: உற்சாகத்தில் மக்கள்!

 

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை: உற்சாகத்தில் மக்கள்!

அடுத்த 24மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை: உற்சாகத்தில் மக்கள்!

சென்னை: சென்னை உள்படத்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  நேற்று இரவு கனமழை பெய்தது.

வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த 3 தினங்களாக மழை பெய்து வந்தது. அதன்படி மதுரை, சிவகங்கை ,தேனி, திண்டுக்கல்,  கொடைக்கானல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக வேலூரில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்ததால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக  அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், கிண்டி சைதாப்பேட்டை, அனகாபுதூர், விமானநிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணி நேரம் மழை தொடர்ந்து பெய்தது. சில இடங்களில் மழையானது விட்டுவிட்டுப் பெய்தது. 

கடலூர், விழுப்புரம், தருமபுரி, சேலம், மதுரை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 24மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.