சென்னையில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க உதவுவது இதுதான்.. காவல் ஆணையர் பெருமிதம்!

 

சென்னையில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க உதவுவது இதுதான்.. காவல் ஆணையர் பெருமிதம்!

சென்னையில் சிசிடிவி கேமராக்களை கண்டு குற்றவாளிகள் அஞ்சி ஓடுவதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னையில் சிசிடிவி கேமராக்களை கண்டு குற்றவாளிகள் அஞ்சி ஓடுவதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை செம்பியம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 359 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், முழுவதும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ள இரண்டாவது காவல் நிலைய பகுதி என்கிற பெயரைச் செம்பியம் காவல்நிலையம் பெற்றுள்ளது. 

இதற்காக நடைபெற்ற சிறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், “சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றச்செயல்கள் குறைந்துள்ளது. சிசிடிவி கேமராக்களை கண்டு குற்றவாளிகள் அஞ்சி ஓடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையின் வடக்கும், மேற்கு மண்டலங்களில் மட்டும் சுமார் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.