சென்னையில் காவலர் மீது காரை ஏற்றிய இரண்டு பேர் கைது !

 

சென்னையில் காவலர் மீது காரை ஏற்றிய இரண்டு பேர் கைது !

போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றும் படி சென்னை போக்குவரத்து காவல்துறை மக்களிடம் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது.

போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றும் படி சென்னை போக்குவரத்து காவல்துறை மக்களிடம் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது. மற்ற பகுதிகளை விடச் சென்னையில் அதிக மக்கள் தொகை காரணமாக வாகன புழக்கம் அதிகமாக இருப்பதால், விபத்து நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ttn

அதுமட்டுமின்றி, ஆங்காங்கே வானங்களை நிறுத்தி விட்டுச் செல்வதால் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. குறிப்பாக, ‘நோ பார்க்கிங்’ இருக்கும் இடத்தில் தான் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்துவார்கள். இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனத்தை எடுக்கச் சொல்லியதற்காகக் காவலர் மீது காரை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

சென்னை பாரிமுனையில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் செந்தில்குமார் போக்குவரத்திற்கு இடையூறாக ஒரு கார் இருப்பதைப் பார்த்து, அந்த காரை அங்கிருந்து எடுக்கும் படி அந்த காரின் உரிமையாளர்களிடம் கூறியிருக்கிறார். அதனால், காரில் இருந்த 2 பேருக்கும் காவலர் செந்தில்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர்கள் காரை அங்கிருந்து எடுத்து காவலர் ஏற்றியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையறிந்த மற்ற காவலர்கள், அந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.