சென்னையில் காற்று மாசைக் குறைக்க ஜப்பான் மாடல் பூங்கா!

சென்னையில் காற்று மாசைக் குறைக்க ஜப்பான் மாடல் பூங்கா!

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜப்பான் மாடல் பூங்கா ஒன்றை சென்னை மாநகராட்சி அமைத்து வருகிறது.
காற்று மாசைக் குறைக்க உள்ள ஒரே இயற்கை வழி அதிக அளவில் செடிகளை நடுவதுதான். தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்திக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடும். அதனால்தான் அமேசான் காடுகள் பற்றி எரிந்தபோது, உலகத்தின் நுரையீரல் எரிகிறது என்று பலரும் வேதனை அடைந்தனர்.

japan

வட இந்தியாவை ஒப்பிடும்போது சென்னையில் காற்று மாசு குறைவுதான். ஆனாலும், மகிழ்ச்சி கொள்ளும் அளவுக்கு அது கட்டுக்குள் இல்லை. நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதைத் தடுக்க இப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இன்னும் சில ஆண்டுகளில் வட இந்திய நகரங்களுக்கு ஏற்பட்ட நிலை இங்கும் வரலாம்.
அதைத் தடுக்க தற்போது சென்னை மாநகராட்சி புதிய திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் தொடக்கமாக, சென்னை கோட்டூர்புரம் ரயில் நிலையம் அருகே 21 ஆயிரத்து 600 சதுர அடி பரப்பளவில் சுமார் 2 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டு ஜப்பான் மாடல் பூங்கா ஒன்றை அமைக்கத் தொடங்கியுள்ளது. இது வழக்கமான பூங்கா இல்லை. மியாவாக்கி என்று கூறப்படும் ஜப்பான் மாடல் பூங்காவாகும்.

park

இந்த பூங்காவின் முதல் வரிசையில் கேனபி என்ற வகை மரங்களும். இரண்டாவது வரிசையில் பனை, தென்னை போன்ற உயரமாக வளரக்கூடிய மரங்களும், மூன்றாவது அடுக்கில் பழ மரங்களும், நான்காவது அடுக்கில் அழகிய பூக்கள் பூக்கும் தாவரங்களும், ஐந்தாவது அடுக்கில் கொடி வகை தாவரங்களும் வளர்க்கப்படும். 
இந்த ஒரு பூங்கா மட்டுமே ஆண்டுக்கு 11 டன் கரியமில வாயுவை பயன்படுத்தி, ஆக்சிஜனை வெளியிடும் என்று தாவரவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பூங்கா அமைக்கப்பட்டு செடிகள் வளர ஆரம்பிக்கும் முதல் ஆண்டிலேயே நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள். முதல் ஆண்டிலேயேயே நான்கு டன் அளவுக்கு இது கார்பன் டை ஆக்சைடை ஈர்த்து ஆக்சிஜனை வெளியிடுமாம். இது போன்ற இன்னும் சில பூங்காக்களை அமைத்து, காற்று மாசை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.