சென்னையில் ஒரே நாளில் 14,300 பேருக்கு இ-பாஸ்

 

சென்னையில் ஒரே நாளில் 14,300 பேருக்கு இ-பாஸ்

கொரோனாவை கட்டுபடுத்தும் வழிமுறைகளில் ஒன்றாக இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பித்த உடனே இபாஸ் கிடைக்கும் நடைமுறை கடந்த திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கிடைக்க தொடங்கியது. இது பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 14,300 பேருக்கு இ-பாஸ்

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் சென்னையில் 14,300 பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் 11 ஆயிரத்து 500 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர விண்ணப்பித்துள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் பலரும் வருகை புரிந்துள்ளனர். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்தததையடுத்து விண்ணப்பித்த 15 நிமிடங்களில் எவரும் இ பாஸ் பெறலாம்.