சென்னையில் உணவு விநியோகிக்கும் உபேர், ஸ்விகி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி!

 

சென்னையில் உணவு விநியோகிக்கும் உபேர், ஸ்விகி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி!

ஆன்லைன் மூலம் வீட்டுக்கே சென்று உணவு வழங்கும் ஊபர், ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்த நிலையில், தமிழகத்தில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ttn

முன்னதாக ஆன்லைன் மூலம் வீட்டுக்கே சென்று உணவு வழங்கும் ஊபர், ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல், மறு உத்தரவு வரும் வரை அனைத்து டீ கடைகளும் மூடப்பட வேண்டும் என்று சென்னை மாநாகராட்சி நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது. அதே போல, தன்னார்வலர்கள் மக்களுக்கு உணவு வழங்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

tn

இந்நிலையில், சென்னையில் உணவு விநியோகிக்கும் உபேர், ஸ்விகி உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், மளிகைப்பொருட்களை எடுத்து சென்று வீடுகளுக்கு விநியோகிக்கவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட விதிமுறைகளுடன் விநியோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது, கையுறை, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாக அணிந்து செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.