சென்னையில் இறுதிப் போட்டி கிடையாது; ஐபிஎல் நிர்வாகம் முடிவு?!..

 

சென்னையில் இறுதிப் போட்டி கிடையாது; ஐபிஎல் நிர்வாகம் முடிவு?!..

கடந்த சீசனில் வெற்றி பெற்றவர்களுக்கு சொந்தமான மாநிலத்தில் அடுத்த சீசனின் இறுதிப்போட்டியை நடத்துவது வழக்கம்.

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியை ஹைதராபாத்தில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 12-ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சென்னையுடன் தோல்வியுற்று 2-ஆவது இடத்தை பிடித்தது.

ipl

கடந்த சீசனில் வெற்றி பெற்றவர்களுக்கு சொந்தமான மாநிலத்தில் அடுத்த சீசனின் இறுதிப்போட்டியை நடத்துவது வழக்கம். அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மூன்று கேலரிகள் அனுமதி விவகாரத்தால் பயன்படாமல் இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டு வந்தது.

rajiv

தற்போது  ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிளே-ஆப்ஸ’ போட்டிகள் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. ஹைதராபத்தில் மே 12- ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.

இதையும் வாசிக்க: சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி: தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!