சென்னையில் இரு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா!அரசும், அதிகாரிகளும் நேரடி செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும்- பத்திரிக்கையாளர் சங்கம்

 

சென்னையில் இரு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா!அரசும், அதிகாரிகளும் நேரடி செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும்- பத்திரிக்கையாளர் சங்கம்

சென்னையை சேர்ந்த இரு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதையடுத்து கொரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து பத்திரிகையாளர்களைப் பாதுகாப்போம், செய்தியாளர் சந்திப்புகளை மற்றும் நோய்த்தொற்று ஆபத்தான சூழல்களில் செய்தி சேகரிக்க நேரில் செல்வதைத் தவிர்ப்போம் என சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சென்னையை சேர்ந்த இரு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதையடுத்து கொரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து பத்திரிகையாளர்களைப் பாதுகாப்போம், செய்தியாளர் சந்திப்புகளை மற்றும் நோய்த்தொற்று ஆபத்தான சூழல்களில் செய்தி சேகரிக்க நேரில் செல்வதைத் தவிர்ப்போம் என சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று ஆபத்து  பரவ ஆரம்பித்த நாளிலிருந்து நோய்த்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பட்டியலில் பத்திரிகையாளர்கள் இடம் பெற்றுள்ளோம். தொடர்ந்து அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும், நிர்வாகங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பல வேண்டுகோள்களை சென்னை பத்திரிகையாளர் மன்றம் முன்வைத்து வருகிறது.

coronavirus

இன்றைக்கு 19-04-2020 தலைநகர் சென்னையில் நம்முடைய பத்திரிகை சகோதரர்கள் சிலருக்கு முதற்கட்டப் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டதாக செய்திகள் வருகின்றன.  இந்தச் செய்திகள் கவலை அளிக்கின்றன. மிக சமீபத்தில் யுனிசெஃப் நிறுவனத்துடன் இணைந்து கோவிட்-19 என்கிற கொரோனாவை நாம் எதிர்கொள்வதில் கையாள வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டிருந்தோம்.

நம்முடைய பல தற்காப்புகளுக்கிடையேயும் நோய்த்தொற்று பாதிப்பு நம்மைக் கவலைக்குள்ளாக்கும் நிலையில் …

1.முதலில் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளான நமது சகோதரர்கள்  விரைவில் நலம் பெற உரிய சிகிச்சைகள் வழங்கிட அரசை  வலியுறுத்துவோம்.

2.பாதிக்கப்பட்ட நமது பத்திரிகை சகோதரர்களுடன் தொடர்புடைய அனைவரும் தாமாக முன்வந்து உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்வோம்.

3. கொரோனா காலகட்டத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியும்  சிறப்புப் பரிசோதனை முகாமை நடத்த சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழக அரசை  வலியுறுத்துகிறது.

chennai-press-club

4. அரசும் ,அரசியல்வாதிகளும் நேரடி செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும். அப்படி  அவர்கள் தவிர்க்கத் தவறினால் நம் பத்திரிகையாளர் பாதுகாப்பு கருதி ஊடக நிறுவனங்கள் உறுதியான முடிவெடுக்க அரசு, அரசியல் கட்சியினர், ஊடக நிர்வாகிகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

5. முன்னெப்போதும் இல்லாத நிலையில் அச்சு, டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஊடகத்துறை மிகக் கடுமையான சவால்களை, நெருக்கடிகளைச் சந்தித்து வரும் தற்போதைய நிலையில் நிறுவனங்கள் – பத்திரிகையாளர்கள் அனைவரது நலனும் முக்கியமான ஒன்று. ஒன்றிணைந்து இந்தச் சவால்களை நாம் கடக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் அனைத்துத் தரப்பினரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

6.பாதிப்புக்கு உள்ளான பத்திரிகையாளர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்போம்.அன்பை செலுத்துவோம்.எந்த இடத்திலும் அவர்களை அடையாளப்படுத்துவது , வேறுபாடு காட்டுவது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்ப்போம்.இப்போதைய தேவை ஒருங்கிணைப்பு ஒற்றுமை ஆதரவு அளவில்லா அன்பு மட்டுமே.அன்பினால் ஒற்றுமையால் கொரோனாவை  வெல்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.