சென்னையில் இரண்டாவது கொரோன நோயாளி! – உச்சக்கட்ட தயார் நிலையில் தமிழக அரசு

 

சென்னையில் இரண்டாவது கொரோன நோயாளி! – உச்சக்கட்ட தயார் நிலையில் தமிழக அரசு

தமிழகத்தில் இரண்டாவது கொரோனா பாஸிடிவ் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. அவர் உடல் நலம் சீராக உள்ளது. மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:
“தமிழகத்தில் இரண்டாவது கொரோனா பாஸிடிவ் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. அவர் உடல் நலம் சீராக உள்ளது. மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், இன்றைய கணக்கு வரை 1,89,750 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2984 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 1120 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது 32 பேர் தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 222 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. 166 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது. 55 முடிவுகள் இன்னும் வர வேண்டும். ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார்” என்று கூறியிருந்தார்.