சென்னையில் இன்று முதல் பேக்கரிகள் இயங்கும் : மாநகராட்சி அறிவிப்பு!

 

சென்னையில் இன்று முதல் பேக்கரிகள் இயங்கும் : மாநகராட்சி அறிவிப்பு!

அத்தியாவசிய கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டது.

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், வைரஸ் பரவுதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 968 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆகஉயர்ந்துள்ளது.  இதனிடையே மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்ப்பதற்காக அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் இயங்க கூடாது என்று அறிவித்தது. அத்தியாவசிய கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டது. 

ttn

தமிழகத்தில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகளுக்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், சென்னையில் பேக்கரிகள் இயங்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. மேலும் காலை 6 மணி முதல் 1 மணி வரை இயங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.