சென்னையில் இன்று மாலை 6 மணியோடு அனைத்து டீக்கடைகளையும் மூட உத்தரவு!

 

சென்னையில் இன்று மாலை 6 மணியோடு அனைத்து டீக்கடைகளையும் மூட உத்தரவு!

தமிழகத்தில் கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நள்ளிரவு மதுரையை சேர்ந்த நபர் உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நள்ளிரவு மதுரையை சேர்ந்த நபர் உயிரிழந்தார். கொரோனா தீவிரம் அதிகரித்துள்ளதால் முதல்வர் உத்தரவின் படி, தமிழகம் முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, கொரோனா அதிகமாக பரவும் அபாய கட்டத்தில் தற்போது இந்தியா இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி  அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ttn

நேற்று பேசிய பிரதமர், 21 நாட்கள் ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் மக்கள் வீட்டிலேயே இருப்பதற்காக அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் 3 வாரங்களுக்கு மக்கள் சமூக விலகல் முறையை கையாள வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டார்.

ttn

தொடர்ந்து, தமிழகத்தில் அனைத்து மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள், ரயில்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அத்தியாவசிய தேவைகளில் ஈடுபட்டுள்ள நபர்களுக்காக 200 பேருந்துகள் மட்டும்  இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் அனைத்து டீ கடைகளையும் மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதே போல விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட வீட்டுக்கே சென்று உணவு கொடுக்கும் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.