சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம் இதோ !

 

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம் இதோ !

சென்னை முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கவிருப்பதால், அதனை முன்னிட்டு சென்னை முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று இரவு சென்னை முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கவிருப்பதால், அதனை முன்னிட்டு சென்னை முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இரவு நடைபெற உள்ளது. அதனால், மெரீனா கடற்கரை, பெசன்ட் நகா் எல்லியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ttn

போக்குவரத்து மாற்றத்தின் விவரங்கள் :

  • மெரீனா கடற்கரை உட்புற சாலையில் இன்று முதல் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. கடற்கரையின் உட்புறத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கத்தின் பின்புறம் வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும். 
  • காமராஜர் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்திநகா், சுங்குவாா்தெரு உள்ளிட்ட சந்திப்பு சாலைகள் வழியே  காமராஜர் சாலைக்குள் வாகனங்கள் நுழையாதவாறு செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 4 மணி தடுக்கப்படும்.  
  • ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா முனை சந்திப்பிலிருந்து போா்நினைவு சின்னம் நோக்கி வரும் வானங்கள் அனைத்தும் என்.எஸ்.சி.போஸ் உள்ளிட்ட சாலைகளின் வழியாக திருப்பி விடப்படும். அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பு,கச்சேரி சாலை,லஸ் சந்திப்பு உள்ளிட்ட சாலைகளின் மூலம் அண்ணா சாலை செல்ல முடியும். 
  • மக்கள் அவரவர் வாகனங்களை ராணி மேரி கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலை ஒருபுறம், சேப்பாக்கம் ரயில்வே நிலைய வாகனம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம். பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில்  நாளை இரவு 8 மணி முதல் திகாலை 4 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப் படாது. 
  • பெசன்ட் நகா் 6-வது அவென்யூ இணைப்பு சாலைகள் வழியாக வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். 
  • மகாத்மாகாந்தி சாலை, 7வது அவென்யூ சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.