சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக நேற்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழையுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. கொரோனா அச்சுறுத்தலால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களிடையே நேற்று பெய்த மழை, உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த மழை வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ttn

 

திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.