சென்னையில் ஆந்திர நகை வியாபாரியிடம் 4 கிலோ தங்கம் கொள்ளை : கைவரிசையைக் காட்டிய 4 ஈரானிய கொள்ளையர்கள் கைது !

 

சென்னையில் ஆந்திர நகை வியாபாரியிடம் 4 கிலோ தங்கம் கொள்ளை : கைவரிசையைக் காட்டிய 4 ஈரானிய கொள்ளையர்கள் கைது !

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், சென்னையில் நகை வாங்க ரூ.1.23 கோடி எடுத்துக் கொண்டு பேருந்தில் வந்துள்ளார்.

கடந்த 12 ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், சென்னையில் நகை வாங்க ரூ.1.23 கோடி எடுத்துக் கொண்டு பேருந்தில் வந்துள்ளார். பாரிமுனை, சவுகார்பேட்டை  உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தினேஷ்குமார் சுமார்  4.3 கிலோ மதிப்புள்ள தங்கக் கட்டிகளை வாங்கியுள்ளார். அதன் பின்னர், வாங்கிய தங்கக் கட்டிகளைப் பையில் வைத்துக் கொண்டு சென்னை வால்டாக்ஸ் சாலையில் நடந்து வந்துள்ளார். அப்போது 2 பைக்கில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து, தாங்கள் டெல்லி சிறப்பு போலீஸ் என்றும் உங்கள் பையைச் சோதனையிட வேண்டும் என்று கூறி தினேஷ்குமாரிடம் இருந்த தங்கக் கட்டிகளைத் திருடிச்  சென்றுள்ளனர். 

ttn

இது குறித்து தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த திருடர்கள் வந்த வாகன எண்ணைச் சோதித்துப் பார்த்தனர். அதில், அந்த பைக்குகள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையின் பல இடங்களில் கொள்ளையடித்த ஈரானிய கொள்ளையர்கள், மீண்டும் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

ttn

இந்நிலையில் போலீசார் எண்ணியதை போலவே, தினேஷ்குமாரிடம் கொள்ளையடித்துச் சென்றவர்கள் ஈரானிய கொள்ளையர்கள் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதன் பின்னர், அந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ 700 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.