சென்னையில் அறிமுகமானது கொரோனா ஆட்டோ :ரூ. 100 அபராதம் பெற்று 4 மாஸ்க் வழங்க திட்டம்!

 

சென்னையில் அறிமுகமானது கொரோனா ஆட்டோ :ரூ. 100 அபராதம் பெற்று 4 மாஸ்க் வழங்க திட்டம்!

குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. 

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனாவால் இதுவரை  1755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. 

இதுவொருபுறமிருக்க மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று  போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும் அரசு மற்றும் போலீசாரின் பேச்சை அலட்சியம் செய்யும் வகையில் தொடர்ந்து பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றி திரிந்து வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு மீறல் காரணமாக இதுவரை பொதுமக்களிடமிருந்து  ரூ.2,91,38,654 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 2, 81, 975 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2, 52, 943 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில் சென்னையில் முதன் முறையாக கொரோனா ஆட்டோ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றி திரிபவர்களை பிடித்து 100 ரூபாய் அபராதம் விதிப்பதுடன் மீண்டும் இந்த தவறை செய்யமாலிருக்க 4 துணி மாஸ்க்குகளும்  கொடுக்கப்படுகிறது.