சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று: மண்டல வாரியாக அறிவித்த மாநகராட்சி!

 

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று: மண்டல வாரியாக அறிவித்த மாநகராட்சி!

ஏப்ரல் 26ஆம் தேதி 29 வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த நாட்களில் மருத்துவமனைகள்,  பரிசோதனை கூடங்கள் வழக்கம்போல் செயல்படலாம்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனாவால் இதுவரை 1755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கோவை, மதுரையில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்  என்றும்  சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26ஆம் தேதி 29 வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த நாட்களில் மருத்துவமனைகள்,  பரிசோதனை கூடங்கள் வழக்கம்போல் செயல்படலாம்.

 

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் வங்கிகளில்  33 % பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள்,  ஏடிஎம்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக வியாபாரிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. 

tt

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை மண்டலம் வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது.  அவை பின்வருமாறு:-

tt

திருவொற்றியூர் -13, மணலி -1 ,மாதவரம் -3, தண்டையார்பேட்டை- 59, ராயபுரம்- 133 ,திருவிக நகர் -55,அம்பத்தூர் -1 , அண்ணாநகர் -39, தேனாம்பேட்டை -53,  கோடம்பாக்கம் – 52, வளசரவாக்கம்- 13, ஆலந்தூர் – 9 , அடையார் – 10 பெருங்குடி – 8 சோழிங்கநல்லூர் -2 , இதர மாவட்டம் -1 மொத்தம் -452