சென்னையிலிருந்து ரஷ்யாவுக்கு கப்பல் போக்குவரத்து – ஒப்பந்தம் கையெழுத்தானது

 

சென்னையிலிருந்து ரஷ்யாவுக்கு கப்பல் போக்குவரத்து – ஒப்பந்தம் கையெழுத்தானது

ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் நகரையும் சென்னையையும் நேரடியாக இணைக்கும் வகையில் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான ஒப்பந்தமும் அடங்கும். சீனாவிற்கும், வட கொரியாவிற்கும் அருகே அமைந்துள்ள இந்த நகரம், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் மிகப் பெரிய துறைமுகத்தைக் கொண்ட நகரமாகும்.

கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால் கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ரஷ்யாவில், அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் விளாடிவாஸ்டாக் நகரில் பொருளாதார மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி இரு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். விளாடிவோஸ்டோக் விமான நிலையத்திற்கு சென்றடைந்த மோடிக்கு, ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், பிரதமர் மோடியும், ஸ்வெஸ்டா (Zvezda) நகரில் உள்ள கப்பல் கட்டுமான வளாகத்தைப் பார்வையிடச் சென்றனர்..

ship from Chennai to Russia agreed

இதைத் தொடர்ந்து விளாடிவோஸ்டோக் நகரில் இரு நாட்டுத் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், பாதுகாப்பு, விண்வெளி, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, அணு சக்தி தொடர்பு முனையங்கள், தொழில்துறை கூட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் நகரையும் சென்னையையும் நேரடியாக இணைக்கும் வகையில் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான ஒப்பந்தமும் அடங்கும். சீனாவிற்கும், வட கொரியாவிற்கும் அருகே அமைந்துள்ள இந்த நகரம், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் மிகப் பெரிய துறைமுகத்தைக் கொண்ட நகரமாகும்.