சென்னையிலிருந்து அவசர தேவைகளுக்கு பயணம் செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்- காவல்துறை

 

சென்னையிலிருந்து அவசர தேவைகளுக்கு பயணம் செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்- காவல்துறை

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 930ஐ கடந்த நிலையில், தமிழகத்தில் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 930ஐ கடந்த நிலையில், தமிழகத்தில் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வெளியூர்களில் வேலைக்காக சென்றோர் வீடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

statement

இந்நிலையில் சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. திருமணம், மருத்துவம், இறப்பு, உள்ளிட்டவற்றுக்காக செல்ல கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம். 7530001100-ல் தொடர்பு கொண்டோ/ எஸ்எம்எஸ்/ வாட்ஸ் அப்பில் தகவல் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.