சென்னைதான் என் இரண்டாவது வீடு ; கோவில்… நெகிழும் பாலிவுட் பாடகர்..!

 

சென்னைதான் என் இரண்டாவது வீடு ; கோவில்… நெகிழும் பாலிவுட் பாடகர்..!

மணிரத்தினம் இயக்கதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வெளிவந்த படம் ‘உயிரே’. ஷாருக்கான்,மனிஷா கொய்ராலா நடித்த இந்தப் படம் திரைக்கு வந்து 22 வருடங்கள் ஆகப்போகிறது.ஆனாலும் அந்தப் படத்தின் பாடல்களை எங்காவது கேட்க நேர்ந்தாலும் அப்போதுதான் புதிதாக கேட்பது போல் அத்தனை பாடல்களும் சுகமாக இருக்கும்.குறிப்பாக ரயில் பயணத்தின் போது ஷாரூக்கானும் மலாய்கா அரோராவும் பாடுகிற ‘தைய்யத் தைய்யா.. பாடல். அந்தப் பாடலில் இருவரும் போடும் ஆட்டம் அவ்வளவு எனெர்ஜிடிக்கா இருக்கும்.

மணிரத்தினம் இயக்கதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வெளிவந்த படம் ‘உயிரே’. ஷாருக்கான்,மனிஷா கொய்ராலா நடித்த இந்தப் படம் திரைக்கு வந்து 22 வருடங்கள் ஆகப்போகிறது.ஆனாலும் அந்தப் படத்தின் பாடல்களை எங்காவது கேட்க நேர்ந்தாலும் அப்போதுதான் புதிதாக கேட்பது போல் அத்தனை பாடல்களும் சுகமாக இருக்கும்.

uyire

குறிப்பாக ரயில் பயணத்தின் போது ஷாரூக்கானும் மலாய்கா அரோராவும் பாடுகிற ‘தைய்யத் தைய்யா.. பாடல். அந்தப் பாடலில் இருவரும் போடும் ஆட்டம் அவ்வளவு எனெர்ஜிடிக்கா இருக்கும். தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தால் மனசும் உடலும் தானாவே சேர்ந்தாடத் தொடங்கிவிடும். அதுசரி,எப்பவோ வந்த பாடலைப் பற்றி இப்போ என்ன சிலாகிப்பு என்று கேக்குறீங்களா..? 

singh

அந்தப் பாடலைப் பாடிய சுக்விந்தர் சிங் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு இசை நிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்னைக்கு விசிட் அடித்திருக்கிறார். கிராமிய விருது, தேசிய விருது என ஏகப்பட்ட விருதுகளை பெற்றவர் என்றாலும் ஆள் ரொம்பவே சிம்பிள்.அப்படி இருப்பதனால்தான் இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் என்று சொன்னாலும் தகும் என்பதற்கு,சென்னை விசிட்டின் போது மீடியா ஆட்களிடம் அவர் பகிர்ந்து கொண்ட தகவலே உதாரணம்.

singh

“ரொம்ப நாளைக்கு அப்புறம் சென்னைக்கு வந்திருக்கீங்க… எப்படி ஃபீல் பண்றிங்க..!?” என்று கேட்டதற்கு, “ என்னோட இரண்டாவது வீடு,கோவில் எல்லாமே சென்னைதான். சென்னைதான் என்னையும் என்னோட இசையையும் உலகத்தோட இணைத்தது. அதை  என் வாழ்நாளில் மறக்க முடியுமா.!? “ என்று சென்னை பற்றிய நினைவுகளையும் ‘உயிரே’ படத்தின் பாடல் உருவாக்கம் நடந்த போது ஏற்பட்ட அனுபவங்களும் ஆயுஸுக்கும்  மறக்காது என்று சொல்லும் அளவுக்கு சென்னை மீது ஏக காதலாக இருக்கிறார் சுக்விந்தர் சிங்.  

singh

பை தி வே இன்னொரு தகவலையும் சொல்ல வேண்டும்… ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் வரும் ‘ஜெய் ஹோ…’ பாடலைப் பாடியதும் இவர்தான்.