சென்னைக்கு 2 நாட்கள் மட்டுமே ரயில் சேவை!

 

சென்னைக்கு 2 நாட்கள் மட்டுமே ரயில் சேவை!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மே. 4 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மே. 4 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக நாட்டின் பல பகுதிகளில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கிவருகிறது. இந்நிலையில் மே.12 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. முதற்கட்டமாக டெல்லியிலிருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்களை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் ரயில்வே அறிவித்தது. ஆனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் தற்போதைக்கு ரயில்சேவையை அனுமதிக்க வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

ரயில்

இந்நிலையில் சென்னைக்கு 14, 16 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. டெல்லியிலிருந்து தமிழகம் வரும் ரயில்கள் வரும் 14, 16 ஆம் தேதி மட்டுமே இயக்கப்படும் என்றும் மே 16 ஆம் தேதிக்கு பிறகு டெல்லியிலிருந்து தமிழகத்திற்கு ரயில்கள் இயக்கப்படாது  எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பிரதமருடனான ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி விடுத்த கோரிக்கையை ஏற்று 3 நாட்களில் மட்டும் ரயில் சேவை வழங்கப்படவிருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது.