சென்னைக்கு இணையாக மதுரையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை! – அமைச்சர் உறுதி

 

சென்னைக்கு இணையாக மதுரையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை! – அமைச்சர் உறுதி

சென்னைக்கு இணையாக மதுரையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை ஒத்தக்கடை வேளாண்மைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் மையத்தை ஆய்வு செய்ய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வந்தார். அப்போது அவரிடம் மதுரையில் கொரோனா பாதிப்பு பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “மதுரை தென் தமிழகத்தின் தலைநகர் போன்ற நகரம். விமானம், ரயில், சாலை வழியாக வெளிநாடு, வெளிமாநிலம், வேறு மாவட்டங்களிலிருந்து அனுமதி பெற்றும், அனுமதியின்றி வருவோரைக் கட்டுப்படுத்த, கண்காணிக்க குழு அமைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று தொற்று கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு இணையாக மதுரையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை! – அமைச்சர் உறுதி
மாநகர், புறநகர் பகுதிகளில் 2500 பணியாளர்கள் வீடு வீடாக சென்று களப்பணியாற்றி வருகின்றனர். மீனாட்சி மிஷன் செவிலியர் கல்லூரி, தெற்கு கூட்டுறவு பயிற்சி மையம், மதுரை காமராஜர் பல்கலைக் கழக விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையின் 34 லட்சம் மக்களைக் காக்க சென்னைக்கு இணையாக மதுரை மாவட்டத்திலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் கொரோனா நோயாளிகள் 94 சதவிகிதம் பேர் குணமடைகின்றனர்.
கொரோனா கேர் மையங்களில் 4500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாளைய தினம் அனைத்து தளர்வும் ரத்து செய்து, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.