சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை எதிர்த்து மனு!

 

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை எதிர்த்து மனு!

சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்கும் அரசாணை வெளியிட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

chennai central

நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்துக்கு தமிழகம் வந்த பிரதமர் மோடி, இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, எம்ஜிஆர் புகழ் பாடினார். இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு , புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பெயர் மாற்றத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

election commission

இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்கும் அரசாணை வெளியிட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டது, நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி மூத்த வழக்கறிஞர் துரைசாமி என்பவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்த மனுவை அளித்துள்ளார். தனது மனுவில் அரசாணையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இதையும் வாசிங்க

காவல்துறை பணியாளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்; இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!