சென்ஃபோன் மேக்ஸ் எம்2 மற்றும் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

 

சென்ஃபோன் மேக்ஸ் எம்2 மற்றும் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 மற்றும் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 மற்றும் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அசுஸ் நிறுவனம் தனது மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் அப்டேட் வெர்ஷனாக சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் குறித்து கீழே அறிந்து கொள்ளலாம்.

சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 சிறப்பம்சங்கள்:

– 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே

– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்

– அட்ரினோ 512 GPU

– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி

– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

– 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

– டூயல் சிம் ஸ்லாட்

– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX486 சென்சார், f/1.8, 1.25μm பிக்சல், EIS, ப்ரோ மோட்

– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

– 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்

– கைரேகை சென்சார்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சென்ஃபோன் மேக்ஸ் எம்2 சிறப்பம்சங்கள்:

– 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்

– அட்ரினோ 506 GPU

– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி

– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

– டூயல் சிம் ஸ்லாட்

– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, EIS, ப்ரோ மோட்

– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்

– கைரேகை சென்சார்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

விலை மற்றும் நிறங்கள்:

அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் புளு மற்றும் டைட்டானியம் ஆகிய இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 3 ஜிபி ரேம் வெர்ஷன் விலை ரூ.12,999 என்றும், 4 ஜிபி ரேம் வெர்ஷன் விலை ரூ.14,999 என்றும், 6 ஜிபி ரேம் வெர்ஷன் விலை ரூ.16,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஃபிளிப்கார்ட் தளத்தில் மட்டும் டிசம்பர் 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் வெர்ஷன் விலை ரூ.9,999 என்றும், 4 ஜிபி ரேம் வெர்ஷன் விலை ரூ.11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 20-ஆம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது.