செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு! – பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

 

செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு! – பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தி.மு.க கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் தமிழக போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதைக் கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில் பாலாஜி அ.தி.மு.க அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

தி.மு.க கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் தமிழக போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதைக் கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

akrur

.செந்தில் பாலாஜி அ.தி.மு.க அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றினார். அப்போது, அரசு வேலை தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் சென்னையிலிருந்து கரூர் வந்த குற்றப்பிரிவு சிறப்புக் காவல் துறையினர் செந்தில் பாலாஜியின் வீடு, கடைகளில் சோதனை நடத்தினர்.

senthil

கரூர் பஸ் நிலையம் அருகே செந்தில் பாலாஜி டெக்ஸ்டைல்ஸ் அலுவலகம் உள்ளது. அங்கு போலீசார் விசாரணை செய்துகொண்டிருந்தபோது அவரது ஆதரவாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது, பெண் ஒருவர் தன் உடல் மீது எண்ணெய் ஊற்றித் தீவைக்க முயன்றார். உடனே தி.மு.க நிர்வாகிகள் அவர் மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.