செந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..?

 

செந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..?

தனது மனைவியின் பேச்சை கேட்டும் பணத்தை பல  இடங்களில் முதலீடு செய்துள்ள பணம், பினாமிகளிடம் உள்ள பணம், பினாமி சொத்துகளை விற்றும் அது தன் கைக்கு முழுமையாக கைக்கு வந்ததும் டி.டி.வி.தினகரன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் பெறலாம் என்கிறார்கள் அவரின்  அடிப்பொடிகள். 

சசிகலா வெளியில் வருவதற்குள் அதிமுகவை முழுதாக  தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரத்தான் டி.டி.வி.தினகரன்  ரகசிய திட்டம் தீட்டியிருந்தார். ஆனால் நடந்து வரும் காட்சிகளோ வேறு. 

Thanga thamizh selvan senthil balaji

அவர் ஆரம்பித்த அமமுக கிட்டத்தட்ட காலியாகி விட்டது. காமெடி நடிகர்களுக்கு எல்லாம் பதவிகளை வாரி வழங்கி வரும் டி.டி.வி.தினகரன் கட்சியின் தொண்டர்கள், செல்வாக்கு உள்ள நபர்களை கழட்டி விடும் வேலையை இப்போது பார்த்து வருகிறார்.

குறிப்பாக சசிகலாவின் பெயரை சொன்னாலே சீறி  விழுகிறார். இனி அவங்க சிறையில் இருந்து வெளியே வந்து கட்சியை நடத்துவதெல்லாம் முடியாத கதை என்று டி.டி.வி.தினகரனின் அடிப்பொடிகள் சொன்னதை கேட்டுதான் இந்த ஆட்டம் என்கிறார்கள். பிறகு தனது மனைவியின் பேச்சை கேட்டும் பணத்தை பல  இடங்களில் முதலீடு செய்துள்ள பணம், பினாமிகளிடம் உள்ள பணம், பினாமி சொத்துகளை விற்றும் அது தன் கைக்கு முழுமையாக கைக்கு வந்ததும் டி.டி.வி.தினகரன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் பெறலாம் என்கிறார்கள் அவரின்  அடிப்பொடிகள். 

ttv dinakaran sasikala

நமக்கு அரசியல் சரிப்படாது. பணம் நிறைய செலவழிக்கணும். அதை சசிகலாவே செய்து கொள்ளட்டும் நாம ஒதுங்கிடலாம். அதிமுகவும் கைக்கு வரவில்லை. அமமுகவும் அழிந்து விட்டது எனவே,  நாம வழக்கம்போல் பாண்டிச்சேரிக்குசேரிக்கு போய் செட்டிலாகி விடலாம் என்று திட்டத்தில் இருக்கிறாராம்.  சரி தனது சித்தி சசிகலாவின் மீது டி.டி.வி.தினகரனுக்கு என்ன கோபம்..?

சொத்துக்களையும், ஜெயா டிவி நிர்வாகத்தையும் இளவரசியின் மகன் விவேக் வசம் ஒப்படைத்ததை டி.டி.வி.தினகரனும்  அவரது மனைவியும் துளி கூட விரும்பவில்லை. அது சசிகலா மீது வெறுப்படையச் செய்து விட்டது. மீண்டு வந்து சசிகலா அரசியல் செய்தாலும் தனக்கு எந்த லாபமும் இருக்காது. மீண்டும் விவேக் தான் அத்தனையும் அனுபவிக்கப்போகிறார் என நினைக்கிறாராம் டி.டி.வி. 

இந்த விஷயங்களை நம்மிடம் கூறிய அமமுக முக்கிய நிர்வாகி ஒருவர், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன், கலைராஜன், தங்க தமிழ்செல்வன்,  இசக்கி சுப்பையா, இப்போது புகழேந்தி ஆகியோர் மாற்றுக் கட்சியில் சேர்வதற்கு காரணமே டி.டி.வி.தினகரன் தான். அவர்கள் அனைவரும் டி.டி.வி.தினகரனுக்கு மிக நெருக்கமானர்கள். தீவிரவிசுவாசிகள்.  அவர்களது எதிர்காலம் வீணாகி விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு தங்களுக்குள் பிரச்னை என்பதைப்போல் காட்டிக் கொண்டு கட்சியை விட்டு வெளியேறி விட்டனர். 

தங்க தமிழ்செல்வன் பேசிய ஆடியோவை அவர்கள் வெளியிட்டு தான் வெளியேற்றினார்கள். அதேபோல் புகழேந்தியின் வீடியோவை தங்கள் கட்சிக்குள்ளேயே கமுக்கமாக வைத்திருக்கலாம். அதை வெளியிட்டு அவரை வெளியேற்றி மாற்றுக் கட்சிக்கு அனுப்ப வைக்கும் நோக்கிலேயே அந்த வீடியோவை வெளியிட்டார்கள்.  அதேபோல் கட்சியை விட்டு நீக்கும் போது மட்டும் தான் அவர்கள் டி.டி.வி.தினகரனை விமர்சித்தார்கள். அடுத்து டி.டி.வி.தினகரன் பற்றி வாயை திறப்பதே இல்லை என்பதையும்  கவனிக்க வேண்டும்’’ என்கிறார்கள்.